உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராத்திரி தேவதை!

ராத்திரி தேவதை!

ஆதி பராசக்தியின் வடிவங்களில் ஒன்றான வராஹி பன்றி முகம் கொண்டவளாக இருக்கிறாள். பொன் மேனியும், எட்டுக் கைகளும் கொண்டவள். பராசக்தியின் படை ஒன்று இருக்கிறது. இந்தப் சேனையின் தலைவி இவளே! தன் கைகளில் பாசம்(கயிறு), உலக்கை, கலப்பை, சங்கு, சக்கரம், கத்தி ஏந்தியிருக்கிறாள். அபய (பாதுகாப்பு, வரத(கேட்டதைத் தருதல்) ஹஸ்தங்களும் (கைகள்) கொண்டிருக்கிறாள்.ராத்திரி தேவதை எனப்படும் இவளுக்கு மாலை முதல் நள்ளிரவு வரையுள்ள நேரமே வழிபாட்டிற்குசிறப்பானது. கிரி சக்கரம் என்னும் ரதத்திலும், வஜ்ர கோஷம் என்னும் சிங்கத்திலும் இவள் பவனி வருவாள். புங்கமரம் இவளுக்கு பிடித்தது. விஜயநகர மன்னர்களின் காலத்தில் வராஹி வழிபாடு தமிழகத்தில் பரவியது. அபிராமி அந்தாதியில், அம்பிகையின் பெயர்களில்ஒன்றாக வராஹி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !