மந்தாரக்குப்பத்தில் பாலதண்டாயுதபாணி வீதியுலா!
ADDED :3907 days ago
மந்தாரக்குப்பம்: பழனி பாலதண்டாயுதபாணி பாதயாத்திரைக் குழு சார்பில் சுவாமி வீதியுலா நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, பழனி பாலதண்டாயுதபாணி பாத யாத்திரைக் குழு சார்பில் மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்திலிருந்து, ராஜ அலங்காரத்தில் முருகன் சுவாமி வீதியுலா நடந் தது. தொடர்ந்து, கடை வீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வேலுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பெண்கள், சுவாமிக்கு மாலை அணிந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.