உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை அம்மன்  உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடந்தது. திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவ ங்கியது. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து  கலசங்கள் புறப்பாடாகி கோபுரத்தை அடைந்தது. தருமையாதீனம் 26வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த  பரமாச்சார்ய சுவாமிகள், எளம்பலுõர் பிரம்மரிஷிமலை அன்னை சித்தர் முன்னிலையில் மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார், திட்டக்குடி  தண்டபாணி குருக்கள், திருஞானசம்பந்த குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9:45 மணிக்கு கோபுர  கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் அருண்மொழிதேவன் எம்.பி., பேரூராட்சி சேர்மன் நீதிமன்னன்,  ராஜன்,   ஸ்ரீஆறுமுகம் கல்விக்குழும நிறுவனங்களின் செயலர் ராஜபிரதாபன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் மன்னன்,  தி.மு.க., நகர செயலர் பரமகுரு,  கூட்டுறவு வங்கி தலைவர் முல்லைநாதன், அன்னை மாதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜவெங்கடேசன், வைத்தியநாத சுவாமி இறை  வழிபாடு மன்றத்தினர், சிவனடியார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !