உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பாலாலய பிரதிஷ்டை!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பாலாலய பிரதிஷ்டை!

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், மகா சம்ப்ரோட்சணத்திற்கான திருப்பணிகள் துவங்குவதை முன்னிட்டு, நேற்று  மூலவர், பரிவாரங்களுக்கான, பாலாலய பிரதிஷ்டை நடந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.  இக்கோவிலில், மகா சம்ப்ரோட்சணம் நடந்து, 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், திருப்பணிகள் நடத்த, இந்து சமய அறநிலைய துறை முடிவு  செய்தது. அதை முன்னிட்டு நேற்று  மூலமூர்த்திகளுக்கு பாலாலய பிரதிஷ்டை நடந்தது.  கடந்த 24ம் தேதி இரவு, 7.00மணிக்கு அங்குரார்ப்பணமும்,  கடந்த, ௨௫ம் தேதி காலையில், இரண்டாம் கால ஹோமமும், இரவு மூன்றாம் கால ஹோமமும் நடந்தன. இதையடுத்து நேற்று காலை, 10.00 மணிக்கு,  பார்த்தசாரதி சுவாமி, ரங்கநாதர், ராமர், வேதவல்லி தாயார், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சார்யர்கள்,  சன்னிதிகள் மற்றும் விமானங்கள், கிழக்கு ராஜ÷ காபுரம், உள்ளிட்டவைக்கு, பாலாலய பிரதிஷ்டை நடந்தது. அதை தொடர்ந்து, திருப்பணிகள் துவங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !