உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் சாலீஸா பாராயணம்

வீரஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் சாலீஸா பாராயணம்

திருவள்ளூர்: காக்களூர், வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் சாலீஸா பாராயணம், காலை முதல் மாலை வரை நடந்தது. திருவள்ளூர் அடுத்த, காக்களூரில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, 22 ஆண்டுகளாக, குடியரசு தினத்தன்று, கோஸ் ஸ்வாமி துளசிதாஸ் மராத்திய மொழியில் இயற்றிய, அனுமன் சாலீஸா எனும் பாராயணம் தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது. அனுமனின் பெருமைகளை, 40 வரிகளில் கொண்ட இந்த பாடலை, தொடர்ந்து நாள் முழுவதும், 108 முறை இங்கு பாடப்பட்டு வருகிறது. 23ம் ஆண்டாக, நேற்று, பாகவதர்கள், காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை வரை பாடினர். இறுதியில், ஸ்ரீராம நாம கீர்த்தனை பாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !