உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜோதி விநாயகர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்!

ஜோதி விநாயகர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்!

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் காமாட்சிப்பேட்டை தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது. கடலூர்  அடுத்த சி.என்.பாளையம் காமாட்சிப்பேட்டை தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.  விழாவை முன்னிட்டு மதியம் 1:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து 3:00 மணிக்கு மகா  அபிஷேகமும், 3:30 மணிக்கு 108 சங்கு அபிஷேகமும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து ஜோதிவிநாயகர் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !