உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தைப்பூசவிழா: நாளை கொடியேற்றம்: பிப்.3ல் தேரோட்டம்!

பழநியில் தைப்பூசவிழா: நாளை கொடியேற்றம்: பிப்.3ல் தேரோட்டம்!

பழநி: பழநி தைப்பூச விழா பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை கொடியேற்றத்துடன் துவங்கி பிப்., 6 வரை 10 நாட்கள் நடக்கிறது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், செய்யப்பட்டு, நாளை காலை 10மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது.

திருக்கல்யாணம்: விழாவின் ஆறாம் நாள் பிப்.,2ல் ஸ்கந்த ஹோமத்துடன் இரவு 7.30 மணிக்கு மேல், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவுலா வகிறார்.

தேரோட்டம்: விழாவின் ஏழாம் நாள், பிப்., 3ல் தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சண்முகநதிக்கரையில் உள்ள தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர். காலை 11 மணிக்கு சுவாமி தேர்ஏற்றம் செய்யப்பட்டு, மாலை 4.35 மணிக்கு தேரடி தேர்நிலையிலிருந்து தேரோட்டம் துவங்கி நான்கு ரத வீதிகளில் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது.

தெப்பத்தேர்: விழாநிறைவு நாள் (பிப்.,6ல்) தெப்பக்குளத்தில் மாலை 6 மணிக்கு மேல் தெப்போற்சவம் நடக்கிறது. விழாநாட்களில் முத்து குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை வாகனங்களில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அடிவாரம் குடமுழுக்கு அரங்கில், சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !