உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கருப்பராயன் கோவில் மகா கும்பாபிஷேகம்

வடவள்ளி : வடவள்ளி கருப்பராயன் கோவில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவையில் மிகவும் பழமையான கோவில்களில் வடவள்ளி கருப்பராயன் கோவிலும் ஒன்று. 80 ஆண்டுகளுக்கு பின், இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நான்கு நாட்களுக்கு, நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ஐந்தாம் நாளான நேற்று காலை ஆறாம் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. பின், திருவருள் திருமேனி உயிர்பித்தல் செய்து, 108 திரவிய ஹோமம் நடந்தது.தொடர்ந்து, கோபுர விமான மூலஸ்தான கருப்பராய சுவாமி, மதேஸ்வரர் சுவாமிஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !