உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சூலூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சூலூர் : கருமத்தம்பட்டி அடுத்த அரசூர் ஊராட்சி ஊத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள கரிய காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முன்னதாக, சித்தி புத்தி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். முதல்கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து ஆதி விநாயகர், முருகர் மற்றும் அம்பாளுக்கு அஷ்ட பந்தன மருந்திடப்பட்டது. இரவு காவடியாட்டம் நடந்தது.நேற்று காலை 4:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தானம் முடிந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் மேள, தாளத்துடன் திருக்கோவிலை வலம் வந்தன. காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் விமானம் மற்றும் கரிய காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, தச தானம், தச தரிசனம், அபிஷேக அலங்கார பூஜை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !