சோழவந்தான் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3909 days ago
சோழவந்தான் : சோழவந்தான் மேலத்தெரு வடக்கத்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் கணேசசர்மா,ரமணி, பாலகுரு முன்னிலையில் மலையாளம் கிருஷ்ணய்யர் வேதபாடசாலை மாணவர்கள் வேதம் முழங்க யாகசாலை பூஜை நடந்தது.தொழிலதிபர் மணிமுத்தையா தலைமையில் வரதராஜபண்டிட் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. எம்.வி.எம்., பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் அன்னதானம் வழங்கினார். நிர்வாகி வள்ளிமயில் திருமாங்கல்ய கயிறு,குங்குமம் பிரசாதம்,ஆடைதானம் வழங்கினார்.