உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: வங்கனூர், அன்னியம்மன் கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூரில், செராத்தூரான் கூட்டத்தினரின் குல தெய்வமான அன்னியம்மன் கோவில் உள்ளது. தை மற்றும் ஆடி மாதங்களில், இங்கு, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அன்னியம்மன் பிரதான கோவில், வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே உள்ள சேரிஅய்யம்பேட்டையில் உள்ளது. அதை தொடர்ந்து, அம்மையார்குப்பம், வங்கனூரிலும் உப கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. வங்கனூர் - மத்தூர் சாலையில் அமைந்துள்ள கோவிலில், சில மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, நேற்று, காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா எழுந்தருளினார். முன்னதாக நேற்று முன்தினம் காஞ்சி ஜயேந்திரர், யாகசாலை பூஜையை துவக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !