உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை!

திருப்பரங்குன்றம் கோயிலில் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை!

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஆறாம் நாள் நிகழ்ச்சியாக சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை நிகழ்ச்சி நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பல்லக்கில் திருஞானசம்பந்தரும் எழுந்தருளினார். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !