அக்னி தீர்த்தக் கரையில் வட மாநில பக்தர்கள் தூய்மைப்பணி
ADDED :3913 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் வடஇந்திய பக்தர்களும், விவேகானந்தா கேந்திரமும் இணைந்து சுத்தம் செய்தனர். மகாராஷ்டிரா, புல்டானா மாவட்டம் பாம்பராம் நகரை சேர்ந்த ஸ்ரீதர் மகராஜ் சேவை அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த 200 பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்கள் விவேகானந்தா கேந்திரத்துடன் இணைந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை, சன்னதி தெரு, கோயில் ரதவீதிகளில் குவிந்துள்ள குப்பை, கழிவு துணிகளை அகற்றினர். அவற்றை நகராட்சி வாகனத்தில் ஏற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அய்யப்பன், விவேகானந்தா கேந்திரம் நிர்வாகி சரஸ்வதி பங்கேற்றனர்.