நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு!
ADDED :3916 days ago
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் இன்று நடக்கிறது. நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூச விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 28ம் தேதி பகலில், கோயிலில் தலப்புராணம் உருவாக காரணமான, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் வீதியுலா நடக்கிறது. பிப்.,3ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி விழா கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூந்துறை மண்டபத்தில் நடக்கிறது. பிப்.,4ம் தேதி இரவு ஏழு மணியளவில் நெல்லையப்பர் கோயில் சவுந்திரசபா மண்டபத்தில் நடராஜரின் திருநடனம் நடக்கிறது. ஐந்தாம் தேதி நெல்லையப்பர் கோயிலின், அலங்கரிக்கப்பட்ட வெளித்தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் தெப்பதிருவிழா நடக்கிறது.