உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்  நடந்தது. விழாவையொட்டி கடந்த  24ம்  தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.  25ம் தேதி காலை  இரண்டாம் கால யாக சாலை பூஜையும் பூர்ணாகுதி  பூஜையும்  நடந்தது. மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (26ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு  பிரம்ம சுத்தி, வேதிகா அர்ச்சனையும், 5:00 மணிக்கு திரவிய ஹோமம், சன்னாவதி ஹோமமும்  6:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும் நடந் தது. பின்னர் யாத்ரா தானமும் கடம் புறப்பாடாகி 6:50 மணிக்கு விமானத்திற்கும், 7:00 மணிக்கு மூலவர்  விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு  மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பூஜைகளை பின்னலூர் குருமூர்த்தி, சேத்தியாத்தோப்பு பாலாஜி தலைமையிலான வேத விற்பன்னர்கள் செய்திருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !