உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் காவடி ஊர்வலம்!

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் காவடி ஊர்வலம்!

திருவண்ணாமலை: தை கிருத்திகையையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தி, மாட வீதிகளில் வலம் வந்தனர். தை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகும், இந்நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள, கம்பத்திளையனார் சன்னதியில் நேற்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி தெய்வாணை சமேத முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க காவடி ஏந்தி, மாட வீதிகளில் வலம் வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், வில்வாரணி சுப்பிரமணியசாமி கோவில், சோமாசிபாடி பாலமுருகன் கோவில், குன்னத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !