உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்பிரமணி ஸ்வாமி கோவில் தைப்பூச திருவிழா துவக்கம்

சிவசுப்பிரமணி ஸ்வாமி கோவில் தைப்பூச திருவிழா துவக்கம்

தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமி பேட்டை, சிவசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் தைப்பூச தேர்திருவிழா, நேற்று புற்றுமண் எடுக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று (ஜன., 29) காலை, 11 மணிக்கு கொடியேற்றமும், இரவு ஆட்டுகிடா வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை காலை சிறப்பு அபிஷேகம், இரவு, 9 மணிக்கு புலிவாகன உற்சவம், 31ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், இரவு, 9 மணிக்கு பூதவாகன உற்சவம், பிப்., 1ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், இரவு, 9 மணிக்கு நாக வாகன உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், பால்காவடி, பூ காவடி எடுத்தலும், இரவு, 10.30 மணிக்கு மேல், 12 மணிக்குள் ஸ்வாமிக்கு கல்யாணமும், கல்யாண கோலத்தில் பொன்மயில் வாகன உற்சவமும் நடக்கிறது.

பிப்ரவரி, 3ம் தேதி விநாயகர் ரதமும், இரவு யானைவாகன உற்சவமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, 4ம் தேதி காலை, 6 மணிக்கு மேல், 7.30 மணிக்குள் பெண்கள் மட்டும் பங்கேற்கும் மஹாரதம் இழுத்தலும், மாலை, 4 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாரதத்தை பொதுமக்கள் இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை, 7 மணி முதல் பாரிமுனை நண்பர்கள்குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது. 5ம் தேதி மாலை, 6 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவமும், வேடர்பறி குதிரை வாகனமும், 6 தேதி காலை சிறப்பு அபிஷேகமும், காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் திருக்கொடி இறக்கமும், இரவு, 10 மணிக்கு பூ பல்லக்கு உற்சவமும், 7ம் தேதி காலை சிறப்பு அபிஷேகமும், இரவு, 9 மணிக்கு சயன உற்சவமும் நடக்கிறது. விழா நாளில், தினமும் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்தர் மரபினர், ஹிந்து சமய அறநிலை துறையினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !