உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை பெருமாள் கோவிலில் தை மகம் திருஅவதார மகோற்சவம்!

திருமழிசை பெருமாள் கோவிலில் தை மகம் திருஅவதார மகோற்சவம்!

திருமழிசை: திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், தை மகம் திருஅவதார மகோற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள பக்திசார் எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, தையில் மகம் திருஅவதார மகோற்சவம். கடந்த, 23ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின், 26ம் தேதி மாலை, ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், தங்க பல்லக்கில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, நேற்று காலை, பெரிய மங்களகிரியிலும்; மாலை, தங்க பல்லக்கிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மகோற்சவம், வரும் 5ம் தேதி வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !