உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் சத்திய ஞானசபை திறப்பு விழா

வள்ளலார் சத்திய ஞானசபை திறப்பு விழா

பொதட்டூர்பேட்டை: தைப்பூச திருநாளில், வள்ளலார் சத்திய ஞானசபை திறப்பு விழா நடைபெற உள்ளது. பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு புறவழி சாலையில், கருப்பு மலை அடிவாரத்தில், வள்ளலார் சத்திய ஞானசபை புதிதாக கட்டப்பட்டு உள்ளது. வரும் பிப்., 3ம் தேதி, தைப்பூச திருநாளில், சபை திறப்பு விழா நடைபெற உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், தொடர்ந்து நடைபெறும். பிப்., 1ம் தேதி, ஆறாம் திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது; 2ம் தேதி, காலை 9:00 மணிக்கு, சன்மார்க்க கொடியேற்றப்படுகிறது. தைப்பூசம் அன்று, (3ம் தேதி), அதிகாலை 3:00 மணிக்கு, வள்ளலார் சத்திய ஞானசபை திறப்பு விழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !