உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்வராயன் கோவிலில் தை கிருத்திகை

செங்கல்வராயன் கோவிலில் தை கிருத்திகை

பள்ளிப்பட்டு: கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில், நேற்று, தை கிருத்திகையை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். சொரக்காய்பேட்டை அடுத்த, நெடியம், கஜகிரி மலையில் அமைந்துள்ளது செங்கல்வராயன் கோவில். மாதாந்திர கிருத்திகைக்கு இங்கு சுவாமிக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது. தை மற்றும் ஆடி கிருத்திகையில், பொதட்டூர்பேட்டை, வெங்கம்பேட்டை, நெடியம், கரிம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள், காவடி எடுத்து வந்து, சுவாமியை தரிசனம் செய்வர். மலை மீது, எந்த நாளிலும் வற்றாத தீர்த்த குளங்கள் உள்ளன. பூஜை மற்றும் அபிஷேகத்திற்கு தேவையான நீர் இதில்இருந்து பெறப்படுகிறது. நேற்று, தை கிருத்திகையை ஒட்டி, காலை 10:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !