பாதயாத்திரைக்குழு பழநி பயணம்
ADDED :3905 days ago
அந்தியூர்: அந்தியூர் அடுத்த ஒலகடம் நால்ரோடு விநாயகர் கோவிலில் இருந்து, தைப்பூசத்துக்கு, ஆண்டு தோரும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு, 12 நாட்கள் விரதம் இருந்து, விநாயகர் கோவிலுக்கு அருகில் பழநிமலை மீது முருகன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதுபோல், செயற்கையாக பழநி மலையை உருவாக்கி, பக்தர்கள் அங்கு வழிபாடு நடத்தினர். தினமும், அங்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்து, நேற்று இரவு, நூற்றுக்கணக்கா னோர் பாதயாத்திரையாக பழநி கோவிலை நோக்கி புறப்பட்டு சென்றனர்.