திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4016 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், தேரோட்டமும் நடந்தது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில், ஜி.எஸ்.டி., ரோடு அருகேயுள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினர்.
கோயில் சிவாச்சார்யார்கள், யாகம் வளர்த்து பூஜை நடத்தினர். சுத்தியல், அரிவாள், உளி ஆகியவற்றிற்கு தீபாராதனை முடித்து தெப்பக்குளத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில் முகூர்த்த கால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்: காலை 10 மணிக்கு 16கால் மண்டபம்முன்டுபு குடைத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.