ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் கருடசேவை!
ADDED :4016 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், தை தேரோட்ட விழாவை யொட்டி, நேற்று நம்பெருமாள் கருடசேவை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், ஆண்டு தோறும் தை மாதத்தில் தேரோட்ட விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 25ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று காலை, நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி, உள்வீதி உலா வந்தார். பிறகு, நடப்பாண்டில் நடந்த முதலாவது கருடசேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.