உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகாசன பெருமாள் கோவில் தைப்பூச பிரம்மோற்சவ விழா!

சுகாசன பெருமாள் கோவில் தைப்பூச பிரம்மோற்சவ விழா!

திட்டக்குடி: திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவில் தைப்பூச பிரம்மோற்சவ விழா முதல் நாள் உற்சவத்தில் பெருமாள் இந்திர   விமானத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திட்டக்குடி ஸ்ரீதேவி, பூதேவி, வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவில்   தைப்பூச பிரம்மோற்சவ விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. 27ம் தேதி மாலை முதல் நாள் உற்சவத்தையொட்டி, மாலை 6:00   மணிக்கு யாகசாலை பூஜையும், 7:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பெருமாள் இந்திர விமானத்தில்  வீதியுலா வந்து பக்தர்களுக்கு   அருள்பாலித்தார். உபயதாரர்கள் ஸ்ரீஆறுமுகம் கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் அண்ணாமலை, முன்னாள் பேரூராட்சித்   தலைவர் மன்னன், ஒப்பந்ததாரர் கிருஷ்ணஜெகதீசன், ஸ்டாலின் மற்றும் சுகாசன பெருமாள் சேவா சங்கத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !