கருப்பணசாமி கோயில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :4002 days ago
வத்தலக்குண்டு : விராலிப்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோயில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. விராலிப்பட்டி கோட்டைக் கருப்பணசாமி கோயில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. நிலக்கோட்டை நடராஜர் கோயில் செயல்அலுவலர் இக்கோயிலுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வந்ததால், இரு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்படுகிறது. நேற்று முன் தினம் தக்கார் கோவிந்தன், ஆய்வாளர் வீரசேரன் முன்னிலையில் எண்ணப்பட்டது. 1 லட்சத்து 17 ஆயிரத்து 525 ரூபாய் வருவாய் கிடைத்தது. எழுத்தர் பாஸ்கரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.