வைத்திக்குப்பம் கோவிலில் அருளாசி
ADDED :3898 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் கோவிலில், நாளை ரங்கன்ஜி அருளாசி வழங்குகிறார். எல்லப்பிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் கடந்த 23ம் தேதி முதல் ராமதாஸர் சரித்திரம் குறித்து, பரனுார் கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் மகன் ரங்கன்ஜி உயன்யாசம் செய்து வருகிறார். அவர் நாளை (31ம் தேதி) காலை 7:30 மணிக்கு வைத்திக்குப்பம் ராதாருக்குமணி சமேத பக்தவச்சல குணபாண்டுரங்கன் கோவிலில், அருளாசி வழங்குகிறார்.அவரை, பஜனையுடன் வரவேற்க வேங்கடாசலபதி பஜனை கூடத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.