உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசத்துக்காக புதிய காவடிகள் தயார்

தைப்பூசத்துக்காக புதிய காவடிகள் தயார்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் பகுதியில், கடந்த ஆண்டை காட்டிலும், தை பூசத்துக்காக தயாரிக்கப்பட்ட காவடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களுக்கும், ஒவ்வொரு சிறப்பு உண்டு. இதில், தை மாதம் என்றாலே தை பூசம் முக்கியமான விழாவாக, பக்தர்கள் கொண்டாடுவர். தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடக்கும்.இதனால் முருகனின் அறுபடை வீடுகளுக்கும், முருக பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்று, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுவது வழக்கம். இதில், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான, பழனி கோவிலுக்கு மாலை அணிந்து பக்தர்கள் அதிகமாக செல்வார்கள்.தவிர, முருகனின் முக்கிய கோவில்களான சிவன்மலை, சென்னிமலை உள்ளிட்ட கோவி ல்களுக்கும் பக்தர்கள் காவடி எடுத்து, நடைபயணமாக செல்வது வழக்கம். ஃபிப்., 3ம் தேதி தை பூசம் வருவதையொட்டி, தற்போது சத்தியமங்கலம் பகுதியில் புதிய காவடிகள் தயாரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. ஒரு காவடி தயாரிக்க, 5,000 ரூபாய் வரை செலவாகிறது, என முருக பக்தர்கள் கூறினர். கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது அதிகளவில் காவடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !