உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு அந்தோணியார் விழாவில் பங்கேற்போர் பிப்., 20 க்குள் விண்ணப்பிக்க கெடு!

கச்சத்தீவு அந்தோணியார் விழாவில் பங்கேற்போர் பிப்., 20 க்குள் விண்ணப்பிக்க கெடு!

ராமேஸ்வரம்: ‘கச்சத்தீவு அந்தோணியார் விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக பக்தர்கள், பிப்.,20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்,” என ராமேஸ்வரம் பாதிரியார் தெரிவித்தார். தமிழக இலங்கை மீனவர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கும் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா, வரும் பிப்., 28, மார்ச் 1 தேதிகள் நடக்கிறது. இதில், தமிழக பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து, இலங்கை யாழ்ப்பாணம் கத்தோலிக்க பிஷப் தாமஸ் சவுந்திரநாயகம், ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜூக்கு கடிதம் அனுப்பி உள்ளார். விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு, ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமாரிடம், சகாயராஜ் மனு கொடுத்தார்.

பின்னர், அவர் கூறியதாவது: கச்சத்தீவு செல்ல விரும்பும் பக்தர்கள், ராமேஸ்வரம் வேர்க்கோடு சர்ச் வளாக அலுவலகத்தில், ரூ.10 செலுத்தி விண்ணப்பம் பெற்று, அதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், 3 பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் பிப்., 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். படகு உரிமையாளர்கள் தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். பக்தர்கள், நேரடியாக படகு உரிமையாளரை சந்தித்து ரூ.1000 (ஒரு நபருக்கு) கட்டணம் செலுத்தி, ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒரு விசைப்படகில் 35 பக்தர்கள், 5 படகோட்டிகள் இருப்பார்கள். நாட்டுப்படகிற்கு அனுமதி இல்லை. கச்சத்தீவு செல்லும் போது ஒரிஜினல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். விழா முடிந்து திரும்புவோருக்கு உணவு, குடிநீர் மற்றும் நிர்வாக செலவுக்கு, படகு உரிமையாளர்கள் 300 ரூபாய் (ஒரு நபருக்கு) செலுத்த வேண்டும். வியாபார நோக்கில் செல்லுதல் கூடாது. போதை பொருட்கள், பாலிதீன் பைகள், 5 ஆயிரம் ருபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது. முதலில் வரும் விண்ணப்ப மனுவுக்கு, முன்னுரிமை வழங்கி வரிசைப்படி படகில் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் சுங்கத்துறை, போலீசார் சோதனைக்கு பக்தர்கள் உட்பட வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !