உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு!

முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு!

பரமக்குடி:  பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில், ஆயிர வைசிய இளைஞர் சங்கத்தின் சார்பில், 29 வது ஆண்டு திருவிளக்கு  வழிபாடு நடந்தது. காலை 10 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மாலை 5 மணிக்கு ராமகிருஷ்ண பஜனை  குழுவினர் பாடல்களை பாடினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு இளைஞர் சங்க தலைவர் போஸ் தலைமையில் திருவிளக்கு வழிபாடு தொடங்கியது.  பொதுச்செயலாளர் லெனின்குமார் வரவேற்றார். வழிபாட்டினை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சீனிவாசன் நடத்தி வைத்தார். நூற்றுக்கணக்கான  பெண்கள் கோயிலில் தீபமேற்றி வழிபட்டனர். மூலவர் தங்க கவசத்திலும், உற்சவர் கல்யாணகாமாட்சி திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !