உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திருக்கழுக்குன்றம் திரிபுர சுந்தரிஅம்பாள் சமேத  வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடை  பெற்றது. திருக்கழுக்குன்றத்தில் கி.பி., 7ம்நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில்
கட்டப்பட்ட, வேதகிரீஸ்வரர் கோவில், தற்போது இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ளது.

சமயக்குரவர்கள் நால்வரால், பாடல்பெற்ற தலம் இது. வேத கிரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாகவும், திரிபுரசுந்தரி அம்மன்அஷ்டகந்த மேனியாகவும் வீற்றிருக்கும் இந்த தலத்தில், கடந்த புதன்கிழமை யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. நேற்று காலை, 9:55 மணியளவில் தாழக்கோவிலில் உள்ள திரிபுர சுந்தரிஅம்பாள், மலைக்கோவிலில் உள்ள வேதகிரீஸ்வரர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இரு கோவில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !