உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரும் 4ல் திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம்!

வரும் 4ல் திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம்!

திருமழிசை: திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், தை மகம் திருஅவதார மகோற்சவத்தை முன்னிட்டு, வரும் 4ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

திருமழிசையில், ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, எழுந்தருளியுள்ள, பக்திஸார் எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, தை மகம் திருஅவதார மகோற்சவம், கடந்த, 23ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, தங்க பல்லக்கிலும்; மாலை கருட வாகனத்தில் ஜெகந்நாத பெருமாளும், ஹம்ச வாகனத்தில் திருமழிசை ஆழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், நேற்று காலை, சேஷ வாகனத்தில் ஜெகந்நாத பெருமாள் வீதிஉலா வந்தார். திருமழிசை ஆழ்வாருக்கு தங்கத் தோளுக்கினியான் நிகழ்ச்சி நடந்தது. மகோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 4ம் தேதி காலை, நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !