உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ரதோற்சவம்!

பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ரதோற்சவம்!

உத்திரமேரூர்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ரதோற்சவம் நடந்தது.

உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச விழா நடப்பது வழக்கம். அதன்படி, இவ்வாண்டிற்கான விழா, கடந்த 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 27ம் தேதி, பஞ்சமூர்த்தி கள் புறப்பாடு நிகழ்ச்சியும், 28ம் தேதி இரவு, பெருச்சாளி வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் வீதி உலா வந்தனர்.

கடந்த 30ம் தேதி அதிகாலை, அம்பாள் குளக்கரையில் இருந்து புறப்பட்டு, தேவஸ்தானம் வந்து, அங்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரருடன், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் இரதோற்சவம் வந்தனர். சுவாமிகளை, அப்பகுதி யினர் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !