உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி பகுதியில் பிரதோஷ வழிபாடு!

செஞ்சி பகுதியில் பிரதோஷ வழிபாடு!

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர். கிரிசங்கர் குருக்கள் பூஜைகளை செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலாவும் நடந்தது.
திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சாமி கோவில் உலா நடந்தது. உபயதாரர் குப்புசாமி, செல்வி, நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி, அர்ச்சகர் செல்வம் பங்கேற்றனர்.

தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பிரேதோஷ வழிபாடு நடந்தது. பூஜைகளை
அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.மேலச்சேரி குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !