ஷீரடி சாய்பாபா கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்!
திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், வரும் 5ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்காக, நேற்று, கோவில் வளாகத்தில், ஐந்து யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவக்கிர ஹோமம், திருமுறை பாராயணம் நடந்தது. இன்று மாலை, முதல் கால யாக சாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது.
நாளை, காலை, விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. வரும், 5ம் தேதி காலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை, 9:00 மணிக்கு, துவார கணபதி, நரசிம்மசரஸ்வதி, மாணிக்கபிரபு, அக்கல்கோட மஹாஜ் (சுவாமி சமர்த) மற்றும் கஜானன் மஹராஜ் ஆகிய சன்னிதிகளில் புதிதாக சிலைகள் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலை, 5:00 மணிக்கு, மூலவர் சாய் பாபாவிற்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது.