பக்தர்களை கவர்ந்த கோமாளி பக்தர்!
ADDED :4074 days ago
பழநி: பழநி தைப்பூச விழாவில் பக்தர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மலைக்கோயிலுக்கு சென்றனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் முருகப்பெருமானின் ஆண்டிவேடம், கருப்புசாமி வேடமிட்டு பாதயாத்திரையாக வந்தனர். சேலம் மாவட்டம் சன்னாசிபட்டியைச் சேர்ந்த பக்தர் செல்வராஜ்,44, சர்க்கஸ் கோமாளி வேடமிட்டு, கையில் வலம்புரிசங்கு, செகண்டியை ஊதியபடி வந்தார். சண்முகநதியில் நீராடி அலகுகுத்தியும், காவடிகள் எடுத்து ஒயிலாட்டம் ஆடினார். அவர் கூறுகையில், நான் கடந்த ஏழு ஆண்டுகளாக கோமாளி வேடமிட்டு வருகிறேன். இதை இறைவனுக்கு செய்யும் சேவையாக நினைக்கிறேன், என்றார்.