உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள முருகன் கோவில், மிகவும் பிரபலமானது. இந்த கோவிலில், தைப்பூச திருவிழா, ஒரு வாரமாக நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி திருக்கல்யாணம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதைத் தொடர்ந்து, தைப்பூச நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை இழுத்து, கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள், தேர் மீது உப்பு, மிளகு, கடலைக்காய், நெல் தூவி வழிபட்டனர். பல ஊர்களில் இருந்து காவடி சுமந்து வந்த பக்தர்கள், நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !