உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 பால்குட அபிஷேகம்!

108 பால்குட அபிஷேகம்!

திருவள்ளூர்: திருவள்ளூர், தேரடி அருகே உள்ள வேம்புலி அம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான பால்குட அபிஷேகம், வரும் 6ம் தேதி நடக்கிறது. அன்று, காலை 8:00 மணிக்கு, திருவள்ளூர், பஜார் தெருவில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலிலிருந்து, 108 பால்குட ஊர்வலம் புறப்படுகிறது. மாடவீதிகள் வழியாக காலை, 9:00 மணிக்கு, வேம்புலி அம்மன் கோவிலை அடையும். பின் வேம்புலி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும். காலை, 9:30 மணிக்கு, அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், காலை, 10:00 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !