சித்தாத்தூரில் தைப்பூசம்!
ADDED :4078 days ago
கண்டாச்சிபுரம்: சித்தாத்தூர் பாலதண்டாயுத பாணி கோவிலில் தைப்பூச காவடி மகோற்சவம் நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச காவடி விழா நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, பாலதண்டாயுத பாணி சுவாமிக்கு சந்தன அலங்காரம், மஞ்சள் இடித்தல், அக்னி கரகம் எடுத்தல், வேல் அணியும் நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் தேர் இழுத்து வந்தனர். இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.