செங்கலரை பெருமாளுக்குநாளை திருக்கல்யாணம்!
ADDED :4271 days ago
கோபி:கோபி தாலுகா, மூலவாய்க்கால் செங்கலரையில் எழுந்தருளி இருக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவராஜப்பெருமாளுக்கு, நாளை (6ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.இன்று (5ம் தேதி) மாலை, 4.30 மணிக்கு, மங்கள இசையோடு பெண் சீர் அழைப்பும், 6.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. நாளை (6ம் தேதி) காலை, 5.30 மணிக்கு தீபவழிபாடும், வெங்கடேச சுப்ரபாதம், விஸ்வக்சேன பூஜை, புன்யாஹமம், கலச அர்ச்சனை, பஞ்சசூகீதம், 7 மணிக்கு சுதர்சன ஹோமம், மகா தீபாராதனை நடக்கிறது.காலை, 8 மணி முதல் கலச பூஜை, மாங்கல்ய பூஜை, ரசஷாபந்தனம், ஹோமம், திருமாங்கல்யம் சாற்றுதல், ஆசீர்வாதம் பெறுதல் நடக்கிறது. காலை, 9.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.