உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மனுக்குரங்கநாதர் சீர்வரிசை வழங்கல்!

சமயபுரம் மாரியம்மனுக்குரங்கநாதர் சீர்வரிசை வழங்கல்!

திருச்சி:ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருந்து, சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, கொள்ளிடம் ஆற்றில் நடந்தது.திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை மாத தெப்ப உற்சவ விழா கடந்த, 25ம் தேதி துவங்கியது.

நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர் கொடுக்கும் நேற்று முன்தினம் நடந்தது.இதற்காக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கருமண்டப்பத்தில் இருந்து, பட்டுப்புடவை, மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள் மற்றும் தாம்பூலம் உள்ளிட்ட மங்கள பொருட்கள், வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு, கொண்டு செல்லப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், மேலாளர் விஜயன் ஆகியோர், சீர் வரிசை பொருட்களை, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் தென்னரசுவிடம் வழங்கினர்.நேற்று அதிகாலை, 1 மணி முதல், 2 மணி வரை சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு
அபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சமயபுரம் மாரியம்மனை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !