உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலிங்க ஸ்வாமி கோவிலில் வெள்ளி ரதத்தில் ஸ்வாமி உலா!

மகாலிங்க ஸ்வாமி கோவிலில் வெள்ளி ரதத்தில் ஸ்வாமி உலா!

கும்பகோணம்:திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி, தீர்த்தவாரி முடிந்து, ஸ்வாமி, அம்பாள் வெள்ளிரதத்தில் வீதியுலா நடைபெற்றது.கும்பகோணம் அருகே, திருவிடைமருதூரில் பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்கபெருமான் கோவில் உள்ளது.

இக் கோவிலில், தைப்பூச பெருவிழா கடந்த, 25ம் தேதி மதியம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்வாமி, அம்பாள் தேரோட்டம் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேர் என, ஐந்து தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தீர்த்தவாரி விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷபவாகனத்தில் தீர்த்தம் காண வந்த மகாலிங்க ஸ்வாமி அம்பாளுடன் வெள்ளி ரதத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !