சிவன் கோயிலில் தெப்பத்திருவிழா !
ADDED :4077 days ago
தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு, தெப்பத்திருவிழா நடந்தது. சுவாமி, அம்பாளுக்கு நேற்று முன் தினம் இரவு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சிறப்பு பூஜைகளும், தீபாரதணை நடந்தது. கோயில் முன்பாக உள்ள தெப்பத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும், அம்பாளும்எழுந்தருளினர். 11 முறை தெப்பத்தை சுற்றி சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.