பெரியநாயக்கன்பாளையம்: 21ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா நிறைவடைந்தது.
விழாவையொட்டி பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்தங்கி அலங்காரம், ஸ்ரீ ராம அலங்காரம், வைரமுடி சேவை, கருட வாகன அலங்காரம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும், பெருமாள், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, திருத்தேர் நிகழ்ச்சி, குதிரை வாகனம், பரிவேட்டை, சேஷ வாகனம், தெப்பத்தேர் உற்சவம் நடந்தது.
நேற்று பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி சாற்றுமுறை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது. விழாவையொட்டி,10 நாட்களும் திவ்ய பிரபந்த சேவா காலம் கோயில் வளாகத்தில் தினசரி மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.