பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்!
ADDED :4059 days ago
இடைப்பாடி: இடைப்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று பழனிக்கு பாதை யாத்திரை சென்றனர்.
இடைப்பாடி பகுதியிலிருந்து, இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள், பழனிக்கு ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதல், இடைப்பாடி சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பழனிக்கு நேற்று முதல் பாதயாத்திரை சென்றனர்.நேற்று, புளியம்பட்டி, ஒட்டப்பட்டி, சித்தூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ஒட்டப்பட்டி ஸ்ரீலஸ்ரீபரமான்நதசாமிகள் தலைமையில், நேற்று பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர்.