பழநியில் தைப்பூச விழா தெப்ப உற்சவம்!
ADDED :4058 days ago
பழநி: பழநி தைப்பூச விழாவில் நேற்று இரவு பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள குளத்தில் தெப்போற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தைப்பூச விழா 10ம்நாளான நேற்று பெரியநாயகிம்மன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தின் மைய மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு ஆறு கலசங்கள் வைத்து சுப்ரமணியர் யாகமும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு மலர் அலங்காரமும் நடந்தது. அதன்பின் முத்துக் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் இரவு 8.45 மணிக்கு பலவண்ண மின்விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் குளத்தை மூன்று முறை வலம் வந்தார். சுவாமிக்கு தீபாராதனையும், வாண வேடிக்கையும் நடந்தது. இரவு 11.30 மணிக்குமேல் கொடியிறக்கத்துடன் தைப்பூச விழா நிறைவடைந்தது.