உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தன்வந்திரி சிறப்பு ஹோமம்!

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தன்வந்திரி சிறப்பு ஹோமம்!

திண்டிவனம்: உலக நன்மை வேண்டி திண்டிவனம் ஆர்ய வைசிய மகிளா விபாக் சார்பில் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடந்தது.

கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பு, கைகளில் சீந்தல் பொடி, அமிர்தகலசத்துடன் மருத்துவ கடவுளான தன்வந்திரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பூஜைகளை சேலம் ராமநாத சர்மா குழுவினர் செய்தனர். நித்தியபூஜை அர்ச்சகர் சுரேஷ், விபாக் தலைவர் சுமதி சதீஷ், செயலர் பானு அசோக், பொருளர் ஸ்ரீவித்யா சிவா, வாசவி கிளப் தலைவர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !