கடத்தூரில் கும்பாபிஷேக விழா!
ADDED :4053 days ago
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அடுத்த, நல்லகுட்லஅள்ளியில், சிவசக்தி ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடத்தூர் அடுத்த நல்லகுட்லஅள்ளியில், சிவசக்தி ஈஸ்வரன் கோவிலில் கணபதி பாலமுருகன், நவக்கிரகங்கள் கோவில் கும்பாபிஷே விழா நடந்தது. விக்னேஸ்வரர் பூஜை, தீபாராதனை, கணபதி, முருகன் நவக்கிரகங்கள், அஷ்டபந்தன பூஜைகள் நடந்தது. மேலும், கடத்தூரிலிருந்து 108 பால்குட ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை ராமகிருஷ்ணன், சொக்கநாதன், முத்துசாமி, முருகன் ஆகியோர் செய்தனர்.