உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவடி கொண்டாடிய பக்தர்கள் பழநி மலையில் தங்கினர்!

காவடி கொண்டாடிய பக்தர்கள் பழநி மலையில் தங்கினர்!

பழநி:பருவதராஜகுல மகாஜனங்கள் சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள், காவடியைத் துாக்கி பாட்டு, ஆட்டத்துடன் பழநி மலைக்கோவிலில் குவிந்தனர்.

சண்முகநதி:பழநி தைப்பூச விழாவையொட்டி, சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பருவதராஜகுல சமுதாயத்தினர், மயில், இளநீர் காவடிகளுடன், மானுார் சண்முகநதி ஆற்றில் கூடினர். நேற்று காலை, 7:00 மணிக்கு, காவடிகளுக்கு மகாபூஜை செய்து, பின் பாதயாத்திரையாக பழநியை வந்தடைந்தனர். மாலை, 3:00 மணிக்கு, காவடிகள் முத்திரை செலுத்தி, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். படிகளில் சிறப்பு பூஜை செய்து, கோவில் வெளிப்பிரகாரத்தில் மல்லிகை, செவ்வந்தி, ரோஜா, அரளி, தாமரை உள்ளிட்ட வண்ணப்பூக்களால் ரங்கோலி வரைந்தனர். மாலை, 5:30 மணிக்கு சாயரட்ச பூஜை, ராஜஅலங்காரம், தங்க ரதத்தில் சின்னக்குமாரர் தரிசனம் ஆகியவை நடந்தன.

உரிமை:
இவற்றில் பங்கேற்ற பக்தர்கள், இராக்கால கட்டளை பூஜையில் சுவாமி தரிசனம் செய்து, மலைக்கோவிலில் தங்கினர். பழநிமலைக் கோவிலில் இரவு தங்கும் உரிமை, இச்சமுதாயத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !