கடலாடி முத்தாலம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
ADDED :164 days ago
கடலாடி: கடலாடியில் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்க உள்ள திருக்கல்யாண உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சுமங்கலி பூஜை நடந்தது. மூலவர் முத்தாலம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாங்கல்ய பூஜையில் கலந்து கொண்டனர். சக்தி ஸ்தோத்திரம், சகஸ்ரநாமம், நாமாவளி, பஜனை, கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தம்பூல பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.