உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி

பழநி: பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.4.62 கோடி காணிக்கையாக கிடைத்தது.


பழநி முருகன் கோயிலில் நேற்று (ஏப்.27) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஸ்ரீ ஓம் சிவா சேவை குழு சார்பில் திருப்பூர், கோவை, திருச்சி, இடைப்பாடி திண்டுக்கல், பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 260 க்கும் மேற்பட்டவர்கள், கோயில் அலுவலர்கள் உண்டியல் எணணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உண்டியல் எண்ணிக்கையில், வெளிநாட்டு கரன்சி 1448 எண்ணங்கள், தங்கம் 748 கிராம் வெள்ளி 12.893 கிலோ, கரன்சி ரூ.4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739, கிடைத்தது. நேற்றைய உண்டியலில் எண்ணிக்கையில் கடந்த சில மாதங்களில் கிடைத்த அளவைவிட அதிக உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. இணை கமிஷ்னர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணிக்கை இன்றும் தொடர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !